கேள்வியெழுப்பிய உயர்நீதிமன்றம்

சோலார் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பெண் தொடுத்துள்ள பாலியல் வன்கொடுமை வழக்கில், தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த இந்த வழக்கில் தற்போது நான்கு குற்றவாளிகள் மட்டுமே வழக்கில் பட்டியலிடப்பட்டுள்ளனர். அரசியல்வாதிகள் மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான தனித்தனி வழக்குகளின் விசாரணையை ஆகஸ்ட் 2021ல் சி.பி.ஐ விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதில் சி.பி.ஐயால் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், ஒரு அறிக்கை மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என கூறினார். இதன் அடிப்படையில் இக்கேள்வியை எழுப்பிய உயர்நீதிமன்றம்,  சி.பி.ஐ’யும் கேரள அரசும் இரண்டு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2012ம் ஆண்டு அவர்களால் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட அந்தப் பெண் புகார் அளித்திருந்தார். காங்கிரஸ் தலைவர்களான உம்மன் சாண்டி, கே.சி.வேணுகோபால், ஹிபி ஈடன், அடூர் பிரகாஷ், எம்.பி., முன்னாள் அமைச்சர் ஏ.பி.அனில் குமார், பா.ஜ.க தலைவர் ஏ.பி. அப்துல்லா குட்டி ஆகியோர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடர்பாக 6 வெவ்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். தலைவர்கள் மீதான வழக்குகள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்டு, கேரள காவல்துறையின் குற்றப் பிரிவினரால் முன்னதாகவே விசாரிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.