திருவண்ணாமலை மாவட்டம், மருத்துவாம்பாடி கிராமத்தில், ஹிந்து பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த, 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அங்கு, ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ சர்ச் உள்ளது. அந்த நிர்வாகத்தின் புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள நியமிக்கப்பட்டவர் பாதிரி யேசுபாதம். இவர் அங்குள்ள மக்களை மதம் மாற தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். அவர்கள் மதம் மாற மறுப்புத் தெரிவித்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையாக பயன்படுத்திவந்த இடத்தில் சர்ச் நிர்வாகம் திடீரென சுற்றுச்சுவர் எழுப்பியது. இது குறித்து கிராம மக்களும் பஞ்சாயத்துத் தலைவர் சிவக்குமாரும் சர்ச் நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘அது எங்களுக்கு சொந்தமான இடம். அதனால் சுவர் எழுப்பியுள்ளோம்’ என பதில் அளித்துள்ளனர். மதம் மாறாததால் பாதையை மறைத்த சர்ச் நிர்வாகம், பாதிரி யேசுபாதம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.