ஹிஜாப் சர்ச்சைக்கு பின்னால் சதி

கர்நாடக மாநிலம், உடுப்பியில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில், ஹிஜாப் எனப்படும் மத உடை அணிந்து வர சில முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதனை எதிர்த்து ஹிந்து மாணவ மாணவிகள் காவி உடை அணிந்து வந்தனர். பள்ளி கல்லூரிகளில் மத உடைகள் அனுமதிக்கப்படாது என அரசு தெரிவித்தது. எனினும், முஸ்லிம்கள் இதனை தொடர்ந்து பிரச்சனையாக்கி வருகின்றனர். இந்த போராட்டத்தின் பின்னால், ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் என்ற பயங்கரவாத அமைப்பின் வழிகாட்டுதலின்படி செயல்படும் பி.எப்.ஐ அமைப்பின் மாணவர் பிரிவான கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா (சி.எப்.ஐ) அமைப்பும், ஸ்டூடண்ட் இஸ்லாமிக் ஆர்கனைசேஷன் (ஏஸ்.ஐ.ஓ) என்ற அமைப்பும் உள்ளது தற்போது வெளியாகியுள்ளது. இந்த அமைப்பினர் கடந்த ஒரு சில மாதங்களாகவே இதற்கு திட்டமிட்டு உள்ளனர். அந்த மாணவிகளை அடிக்கடி சந்தித்து பேசியுள்ளனர். இதனை சி.ஏ.ஏ போன்று பெரிய, நீண்ட பிரச்சனையாக எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இதன் பின்னணியில், சமீபத்தில் கர்நாடகாவில் நிறைவேற்றப்பட்ட கட்டாய மதமாற்ற தடுப்பு சட்டத்தை நீக்குவது, அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவது, மதமாற்ற விவகாரங்களை மூடிமறைப்பது உள்ளிட்ட பல சதிகளும் உள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழகத்தில் மதமாற்ற கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவி லாவண்யா விவகாரத்தை மறைக்க தமிழகத்தில் உள்ள சில கட்சியினரும், அமைப்புகளும்கூட இதன் பின்னணியில் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.