டாலர் கடத்திய முதல்வர்

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் பரபரப்பான திருப்பமாக, அந்த வழக்கின் முக்கிய குற்றவாளியில் பிஎஸ் சரித் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், கடந்த 2017ல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்ற முதல்வர் பினராயி விஜயன், ஒரு பார்சலில் கட்டு கட்டாக டாலர்களை எடுத்து சென்றார். அந்த டாலர் கடத்தலுக்கு ஸ்வப்னா சுரேஷ், ஐக்கிய அமீரக தூதரக அதிகாரி ஜெனரல் ஜமால் அல் ஜாபி, கலீத் முகமது அல் சௌக்ரி, எம் சிவசங்கர் ஆகியோரும் உதவினர் என கூறினார். மேலும், தங்கக் கடத்தலில் அவர்களின் பங்கு என பல்வேறு விஷயங்களை சுங்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஒப்புக்கொண்டுள்ளார். இது பினராயி விஜயனுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.