திருப்பூர் – செரங்காடு பகுதியில், ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக திருப்பூர் குடிமைப்பொருள் பறக்கும் படையினருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் சோதனை மேற்கொள்ளப்பட்ட்து. வேன் ஒன்றில் ரேஷன் அரிசி மூட்டைகள் கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. வேனில் இருந்த 7.5 டன் அளவிலான 150 ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வேன் ஓட்டுனர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுபோல ரேஷன் அரிசிக் கடத்தல் தடுக்கப்படுவதும் பிடிபடுவதும் வழக்கம்தான் என்றாலும், அவ்வழக்கில், கடத்த அவற்றில் ஓட்டுனர், துணைக்கு வந்தவர்கள்தான் பொதுவாக கைது செய்யப்படுகின்றனர். ஆனால், அதனை கொடுத்த ரேஷன் கடை ஊழியர்கள், ஏஜெண்டுகள், அதனை வாங்கி விற்கும் விற்பனையாளர்கள், பின்னணியில் உள்ள முக்கிய புள்ளிகள் எல்லாம் ஏனோ அதிகம் மாட்டுவதே இல்லை.