அறநிலையத்துறை தேவையில்லாத ஆணி

தமிழகத்தில் கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை கண்டித்து தமிழக பா.ஜ.க சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் பங்கேற்றனர். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ஹெச். ராஜா, சி.பி ராதாகிருஷ்ணன், கனல் கண்ணன், வேலூர் இப்ராஹிம், கேசவ விநாயகம், வி.பி.துரைசாமி, கருநாகராஜன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டு பேசினர். இதில் பேசிய அண்ணாமலை, “ஹிந்து கோயில்களை அறநிலையத்துறை மேற்பார்வையிடலாம் ஆனால் நிர்வாகம் செய்யக்கூடாது. குத்தகை என்ற பெயரில் கோயில் நிலங்கள் தாரை வார்க்கப்படுவதை தடுக்க வேண்டும். ஹிந்து கோயில்களுக்கு 4 லட்சம் ஹெக்டேர் சொத்துக்கள் உள்ளன. ஆண்டுதோறும் சொத்து விபரங்களை பட்டியலிட வேண்டும். ஆகம விதிமுறைகளில் அரசு தலையிட கூடாது. அறங்காவலர்களாக அரசியல் சார்பற்றவர்களை நியமிக்க வேண்டும். மீட்கப்பட்ட சாமி சிலைகளை அருங்காட்சியகங்களில் வைக்கக்கூடாது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே அறநிலையத்துறையை நீக்குவதுதான். தமிழகத்தில் ஜாதியை வைத்து தி.மு.க அரசியல் செய்து வருகிறது” என கூறினார். ஹிந்து சமய அறநிலைத்துறை கருப்பு பெட்டியை போல் இயங்கிக்கொண்டிருக்கிறது. அமைச்சர்களும் அதிகாரிகளும் மிச்சர் சாப்பிடுவதற்கும், டாய்லெட் சீட் மாத்துவதற்கும் கோயில் உண்டியலிருந்து பணம் எடுத்து செலவிடப்படுகிறது. தமிழகத்திற்கு ஹிந்து சமய அறநிலையத்துறை தேவையில்லாத ஆணி. கோவில்களில் இருந்து அரசு வெளியேற வேண்டும். திருச்செந்தூரில் பொதுமக்களால் ஒப்படைக்கப்பட்ட 5,309 மாடுகளை காணவில்லை. ஹிந்து சமய அறநிலையத்துறை மாடுகளை திருடுகிறது. உடையலூரில் ராஜராஜ சோழன் சமாதி கேட்பாடற்று இருக்கிறது. நீங்கள் மிச்சர் சாப்பிடும் காசில் சமாதி கட்டலாமே. அமைச்சர் சேகர்பாபு உங்களுக்கு அதற்கு மனமில்லை. ஹிந்துக்களின் பாதுகாவலன் என்று சொல்லும் தி.மு.க அரசு, ஒரு சிலையை மீட்டு வந்ததற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும். அக்கட்சிக்கு கோவிலின் உண்டியல் மீது தான் கண் உள்ளது. பா.ஜ.க எந்த மதத்திற்கும் விரோதி இல்லை. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கூட கோவில்களில் திருட அனுமதிக்கவில்லை. ஆனால், தி.மு.க ஆட்சியில் கோயில் பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது” என கூறினார்.