பா.ஜ.க நல்லது

முகநூல், டுவிட்டர், மைக்ரோசாப்ட், யூடியூப் உள்ளிட்ட அமைப்புகளால், பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட உலகளாவிய இணைய மன்றம் Global Internet Forum to Counter Terrorism (GIFCT). இது, பயங்கரவாதிகள், வன்முறையாளர்கள் போன்றோர் டிஜிட்டல் இணையதளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க உருவாக்கப்பட்டது. இதன் ஹாஷ்-ஷேரிங், டேட்டாபேஸ் வகைபிரித்தலை “விரிவுபடுத்துதல்” என்ற தலைப்பில் 177 பக்க அறிக்கையின் 62 வது பக்கத்தில், ஆஸ்திரேலியா ஃபர்ஸ்ட் பார்ட்டி, தேசிய சோசலிச இயக்கம் ஆகிய இரண்டு வலதுசாரி குழு ஆகியவற்றுடன் உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியான பாரதீய ஜனதா கட்சியை இணைத்து பட்டியலிட்டுள்ளது. இந்த தரவுகளின் அடிப்படையில் பா.ஜ.க, அதன் சித்தாந்தங்கள் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் பாதுகாப்பான இயக்கமாக வகைபடுத்தப்பட்டுள்ளது. இதில் இடதுசாரி கட்சிகள் பலவும், பயங்கரவாத பட்டியலில் இணைந்துள்ளன.