அக்னி நட்சத்திரம் ஆரம்பம்

கத்தரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் நாளை முதல் ஆரம்பம் ஆகிறது. இந்த சமயத்தில், சூரியனின் உக்கிரமான கதிர்கள் நேரடியாக பூமி மீது விழுவதால் கோடை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும். இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தேவையின்றி வெயிலில் அலைவது கூடாது என வானிலை ஆய்வாளர்களும் ஜோதிடர்களும் தெரிவிக்கின்றனர்.