காலன் பறித்துக்கொண்ட காவி தேவதைக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

பொதுவாக நடிகைகள் என்றாலே ஒப்பனை பிரியர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்கள் , பணம் –  பகட்டு  விரும்புபவர்கள் என்று ஒரு கருத்தியல் உண்டு. அந்தக் கருத்துகளை தகர்த்து ஒரு மாநில கட்சியின் சர்வ வல்லமை பொருந்திய தலைமையாக  கால் நூற்றாண்டு காலம் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில்   கோலோச்சிய  நடிகையை கூட  பாரதம் கண்டிருக்கிறது.   ஆனால் எந்த அதிகார பதவியுமின்றி கட்சி பொறுப்பும் இல்லாமல் தேசிய தெய்வீக உணர்வோடு  பாஜக எனும் தேசிய கட்சிக்காக  களப்பணியாற்ற வந்தசவுந்தர்யா  எனும்  நடிகையை  பாஜகவின் முகமாக முதன் முதலில் பாரதம் பார்த்தது.

கர்நாடகத்தில்  பிறந்து வளர்ந்து மருத்துவ படிப்பை  பாதியில் விட்டு நடிகையானவர் தென்னிந்திய முண்ணணி நடிகையானார்.  உச்சத்தில் இருக்கும் போது  யாருக்கும் அஞ்சாது பாஜகவின் இந்துத்துவ சித்தாந்தம் பிடித்திருக்கிறது . அதனால் கட்சியில் இணைகிறேன் என்று பாஜகவின் தொண்டரான தேசியவாதி.

2004  நாடாளுமன்ற தேர்தலில் தெஹல்கா என்ற இட்டு கட்டிய பொய்யை வைத்து வாஜ்பாயை வீழ்த்த நினைத்தவர்களுக்கு எதிராக பிரபலமான முகமாக  பாஜக ஆதரவு  பிரசாரம் செய்தவர்.

தனது பாஜக ஆதரவு நிலைப்பாட்டால் பிரிவினைவாத கூடாரமான  தமிழ்திரை உலகையும் , மத பயங்கரவாத பிடியிலிருந்த பாலிவுட்டையும் அவர்களின் வன்மத்தையும் கடந்து பாஜக வை தெளிவாக உறுதியாக ஆதரித்தவர்.

மிக மோசமான விஷம பிரச்சாரங்களை முறியடிக்க அவசியம் உங்கள் பரப்புரை ஆந்திர மாநிலத்தில் அவசியம் தயவு செய்து சிரமம் பார்க்காமல் வாருங்கள் என்ற வெங்கைய நாயுடுவின் கோரிக்கையை ஏற்று பெங்களூருவில் இருந்து தனியாக உலங்கு வானூர்தி அமர்த்திக்கொண்டு ஹைதராபாத் –  கரீம் நகர் புறப்பட்டவர் சில நிமிடங்களிலேயே அந்த உலங்கு வானூர்தி (ஹெலிகாப்டர்)  நடுவானில் தீப்பிடித்து தரையில் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்.  33  வயதில் 3  மாத கர்ப்பிணியாக  தனது ஆரோக்யம் அசதி மறந்து  ஒரு தேசியவாதியாக  பாஜகவின் வெற்றிக்காக  பரப்புரை செய்ய  அன்றலர்ந்த தாமரை போல புறப்பட்டவர்  சில நிமிடங்களில் கரிக்கட்டையாக மண்ணில் விழுந்தார். கர்ப்பிணியான  அவரின் மரணத்தை  அபசகுனமாக பாஜகவின் தோல்விமுகமாக கொண்டாடி இந்து இந்திய விரோத காங் கம்யு திராவிட கூட்டணி தங்களது வன்மத்தை தீர்த்துக் கொண்டார்கள்.

பாஜகவினர் அதிர்ச்சியில் உறைய தேசியவாதிகளும் அவரின் அபிமானிகளும் நிலைகுலைந்தனர்.  எதிரிகளின் எண்ணம் போலே அந்த தேர்தலில் பாஜக தோல்வியடைந்து காங்- கூட்டணி அரியணை அமர்ந்தது.   ஆனால் அக்னியில் வெந்து தணிந்த அந்த காவி மகளின் ஆன்மா அடுத்த பத்து ஆண்டுகள் கழித்து அசுர பலத்தோடு பாஜக மோடி தலைமையில் ஆட்சி அமைத்ததில் நிச்சயம்  அகம் குளிர்ந்திருக்கும்.

இன்று மத்தியில் பாஜக ஆட்சி பல மாநிலங்களில் பாஜக ஆட்சி  என்ற  காலகட்டத்திலேயே  கங்கணா ரணாவத் போன்ற  பாஜக,ஆதரவு நடிகைக்கு   இவ்வளவு அச்சுறுத்தல் இருக்குமானால் ,  அந்தாளில் ஆமாம் நான் ஒரு இந்துத்துவ ஆதரவாளினி தான் பாஜக அபிமானி தான் என்று வெளிப்படையாக பேசி தான் ஒரு வீரம் செறிந்த இராஜபுத்திரி என்று மெய்ப்பித்த நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்கு எவ்வளவு அச்சுறுத்தல் இருந்திருக்கும்? .

அதே கால கட்டத்தில் தென் இந்திய திரை உலகம் முதல்  பாலிவுட் வரை முண்ணணியில் இருந்த நடிகை சவுந்தர்யா நடிகைகள்  மோனிஷா –  திவ்யபாரதி இருவரின் முடிவை பார்த்த பிறகும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை அரசியல் கடந்து சித்தாந்த ரீதியாக பேச எவ்வளவு துணிச்சல் இருந்திருக்க வேண்டும்?. அவரின் மனதில் எவ்வளவு தேசிய உணர்வு பீறிட்டிருக்க வேண்டும்? .

அவரின் மரணத்திற்கு பிறகு கூட அவரை கௌரவிக்க நந்தி விருது வழங்கி தெலுங்கு திரை உலகம் தங்களின் தேசியத்தை  உயிர்ப்பித்தது.

அவர் முண்ணணி நாயகியாக வலம் வந்த தமிழ் திரை உலகமோ  சவந்தர்யாவின் பாஜக ஆதரவு நிலைப்பாட்டிற்காகவே அவரின் மரணத்தை கூட புறக்கணித்து தங்களது திராவிட விசுவாசத்தை மெய்ப்பித்தது.

திராவிடத்திற்கு பகடையாகும் நடிகையின் திருமணம் முதல் பிள்ளைப்பேறு வரை  கொண்டாடி தீர்ப்பவர்களுக்கு  சவுந்தர்யா போன்ற தேசியவாதிகளின் அருமை தெரிய வாய்ப்பில்லை.அவர்கள்  அப்படித்தான்.

இன்று பாஜக வில் இருக்கும் நடிகைகளை அவமதித்து பேசும் நாலாந்தர அரசியல்வாதிகளுக்கு  மகத்துவமான சவுந்தர்யா போன்ற நல்முத்துக்களை  உணர முடியாது.

காதலனோடு தங்க போய் மரணித்த நடிகையின் மரணத்திற்கு மாதமாக ஒப்பாரி வைத்த ஊடகத்திற்கும் காவியாக வாழ்ந்து காவியமாகி போன சௌம்யா என்ற சவந்தர்யாவை நினைவிருக்காது.

தேச விரோதிகள் அவரை  மறந்திருக்கலாம். ஆனால் பாஜக  ஆதரவாளர் என்ற கட்சி அரசியல் கடந்து  தென் இந்திய மக்களின் திரை உலக கலாச்சார முகமாக மறைந்தும் வாழும் அந்த காவிய நாயகியை தேசியவாதிகள் என்றும் மறப்பதற்கியலாது.

ஏப்ரல் 17   2004 –  ல் கருகிய அந்த கலையுலக தாமரையின் 19   ம் நினைவு நாளில் காவிகள் அவரை கண்ணீரோடு நினைவில் நிறுத்துகிறோம்.

அன்று அவர் பிரயத்தனம் செய்த பாஜக ஆட்சி  இன்று அசுர பலத்தோடு பாரதத்தை ஆள்வதும் உலகின் குருவாக பாரதம் பரிமளிப்பதும் கண்டு கர்ப்ப பாரத்தோடு கருகிய அவரின் ஆன்மா அமைதியடையும் என்று நம்புகிறோம்.

தேசிய உணர்வில் பிறந்து பல்லாயிரம் பலிதானங்களில் வளர்ந்த பாஜக எனும் அரசமரத்தை  ஆதரித்த அபிமானிகளில் ஒருவராக விபத்து(?) என்ற அகால மரணமடைந்த  அவரின் ஆன்மா இறைவனின் பாதங்களில் இளைப்பார பிரார்த்திக்கிறோம்.

காலங்கள் உருண்டாலும் காவிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்த காலன் பறித்துகொண்ட  சவுந்தர்யா என்ற பொற்றாமரையை அவரின் நினைவுநாளில் கண்ணீர் துளிகளால் கனத்த இதயத்தோடு நினைவேந்துகிறோம்.

தேசிய பணியில்.

ஜான்சிராணி துளசிராமன்.