மனத்தின் குரலில் தமிழ் மணம்

மனத்தின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘பஞ்சாப் சீக்கிய குரு கோவிந்த் சிங் தமிழ் குறித்து பெருமையாக கூறியுள்ளார். திருக்குறள் உலகப் புகழ்பெற்றது. உலகிலேயே தமிழ்மொழி சிறந்த மொழி. தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் உலகின் பழமையான தமிழ்மொழி, தமிழ் கலாசாரத்தின் பெரிய அபிமானி, ரசிகன். தமிழ் மீதான என் அன்பு என்றும் குறையாது. பருவமழை காலம் துவங்க உள்ளது. தண்ணீரை சேகரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நமது வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்’ என கூறினார். மேலும், ‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரரும், தங்களது வாழ்க்கையில் கடுமையான போராட்டங்கள் சந்தித்தவர்கள். நீண்ட காலம் கடுமையாக உழைத்து உள்ளனர். வீரர்கள், அவர்களுக்காக மட்டுமல்ல, நாட்டிற்காக செல்கின்றனர்’ என அவர்களுக்கு புகழாரம் சூட்டினார். ம.பி மாநிலத்தில் உள்ள துலேரியா கிராமத்தை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடிய மோடி, ‘கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்க கடுமையாக உழைத்த நமது விஞ்ஞானிகளை பாராட்டிய பிரதமர், தடுப்பூசி மீதான தயக்கத்தில் இருந்து மக்கள் மீண்டு வர வேண்டும். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்தார்.