கடன் உச்சத்தில் தமிழகம்

தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசின் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தமிழக அரசு, கடன் வாங்கும் வரம்பின் உச்சத்தை நெருங்கிக்கொண்டு உள்ளது. இனிமேல் கடன் வாங்கும் நிலையில் தமிழகம் இல்லை என்பதை ஒப்புக்கொண்டார். மேலும், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு சாத்தியமில்லை என்பதையும் சொல்லி விட்டார். மெத்தப் படித்த நிதியமைச்சர், உலகளாவிய பொருளாதார நிபுணர்கள் எல்லாம் இருந்தும்கூட, தி.மு.க அரசால் தமிழகத்தை கடன் பிரச்சனையில் இருந்து மீட்கவும், அளித்த வாக்குறுதிகளை சொல்லியபடியே நிறைவேற்றவும் முடியவில்லை. தமிழக நிலைமை இப்படியே தொடர்ந்தால், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சில நாட்களுக்கு முன்னர் சொன்னதுபோல, இன்னும் ஒரு வருடத்தில் தி.மு.க அரசு கடன் வங்க முடியாத நிலை ஏற்படும், அப்போது அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக்கூட முடியாத சூழல் வரும் என்பது நிதர்சனமாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.