வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் ஆய்வுக்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரி அஞ்சுமன் இன்டெஜாமியா மசாஜித் கமிட்டி உச்ச நீதிமன்றத்தை அணுகியது. வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்கில் தற்போதைய நிலையே தொடர உத்தரவிடக் கோரி, தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்பு வழக்கறிஞர் ஹுசெபா அஹ்மதி கோரினார். ஆனால், ஆவணங்களை தாங்கள் பார்க்காத நிலையில், உண்மையான பிரச்சனை என்ன்னவென்று தெரியாத நிலையில் வழக்கின் தற்போதைய நிலையே தொடர எப்படி அனுமதி வழங்க முடியுனம் என்று கேட்ட நீதிமன்றம், ஆய்வினை நிறுத்த மறுத்துவிட்டது.