பாரத் கௌரவ் ரயில்களுக்கு மானியம்

ஐ.ஆர்.சி.டி.சியால் ஏற்பாடு செய்யப்பட்ட யாத்திரை மையங்களில் உணவு, தண்ணீர், தங்குமிடம் மற்றும் உள்ளூர் போக்குவரத்துக்கான ஏற்பாடுகள் என அனைத்துக்கும் சேர்த்து பாரத் கௌரவ் ரயில்களில் பயணம் செய்ய ஒரு பயணிக்கு ரூ. 15 ஆயிரம் செலவாகும் நிலையில், ​​ ரூ. 5 ஆயிரத்தை மானியமாக வழங்க கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதனால், புதிதாக தொடங்கப்பட்ட பாரத் கௌரவ் ரயில் சேவையை யாத்ரீகர்களுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்கும் நாட்டின் முதல் மாநிலமாக கர்நாடகா உருவாகியுள்ளது. கர்நாடகாவிலிருந்து காசி யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கான விரைவில் மிகவும் சிக்கனமான மற்றும் எளிதான ஆன்மீக சுற்றுலாவாக இது அமையவுள்ளது. பைப்பனஹள்ளி சர்.எம். விஸ்வேஸ்வரய்யா ரயில் நிலையத்தில் இதற்கான ரயிலை ஆய்வு செய்த கர்நாடக அமைச்சர் சசிகலா ஜொல்லே, ‘ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த ஏழு நாள் புனிப்பயணத்தைத் தொடங்க அரசு தயாராகி வருகிறது. இந்த ரயிலில் 14 பெட்டிகள் இருக்கும். அவற்றில் 11 பெட்டிகள் பயணிகள் பயணத்திற்காக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியும் மாநிலத்தில் உள்ள முக்கியமான பெட்டி கோயிலாக மாற்றப்படும். இதற்காக ரயில்வே அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியப் பிறகு ரயில் பெட்டிகளை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது காசி யாத்திரையை மேற்கொள்ள வேண்டும் என்பதே பெரும்பாலான ஹிந்துக்களின் விருப்பம். இதை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை ஒழுங்கமைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். முதல்வர் பசவராஜ் பொம்மை எங்கள் பணிக்கு வழிகாட்டி வருகிறார்’ என தெரிவித்தார்.