ஐயப்ப பக்தர்களை இழிவாகப் பேசிய சுபவீ

திராவிட இயக்க தமிழ்ப் பேரவை என்ற ஒரு அமைப்பின் பொதுச்செயலாளராக இருப்பவர் சுப. வீரபாண்டியன். சமீபத்தில், சென்னை மணியம்மை அரங்கத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இவர், “தமிழகத்திலிருந்து ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் வழக்கம் 1960ம் ஆண்டுகளின் மத்தியில்தான் தொடங்கியது. நடிகர் நம்பியார் போன்ற பிரபலங்கள் ஐயப்பன் கோயிலுக்குச் செல்லவே, பக்தர்களின் எண்ணிக்கையும் கூடியது.ஆனால், ஐயப்பன் கோயிலுக்குச் செல்வதற்காக அடிப்படையும், தேவையும் எங்கே இருக்கிறது என்று சொன்னால் பலருக்கும் வியப்பாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும்.தமிழகத்தில் அரிசிப் பஞ்சம் கடுமையாக இருந்தபோது லாரிகள் தமிழக எல்லையைத் தாண்டி கேரளாவுக்குச் செல்லக்கூடாது என்று சட்டம் விதிக்கப்பட்டது.ஏனெனில், அப்போது கேரளாவிலும் அரிசிப் பஞ்சம் இருந்தது.இப்படி லாரிகள் தடுக்கப்பட்டதால் தமிழர்கள் தலையில் வைத்து அரிசி கொண்டு போனார்கள்.இதுதான் சபரிமலைக்குச் செல்வதின் தொடக்கம். லாரியில்தானே கொண்டு போகக் கூடாது, தலையில் கொண்டுபோனால், அதுவும் இருமுடி கட்டி பக்தி என்கிற பெயரில் கோயிலுக்குக் கொண்டு போனால் என்ன செய்ய முடியும் என்று கொண்டு செல்லத் தொடங்கினர். பின்னர் அதுவே வழக்கமாகி விட்டது” என்று கூறியுள்ளார்.இவரது இந்த பேச்சுதான் ஐயப்ப பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பல்வேறு தரப்பினரும் சுப.வீரபாண்டியனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.பிரான்ஸ் தமிழச்சி என்பவரால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான இவர் தான் கள்ளக்காதலுக்கு திருமணம் கடந்த உறவு என்ற ஒரு புதிய விளக்கத்தை கொடுத்தவர்.இவரை தான், தமிழ்நாடு பாடநூல் கழக அறிவுரைக் குழு உறுப்பினராக தி.மு.க. அரசு நியமித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.