லவ் ஜிஹாத்தை எதிர்த்து போராட்டம்

ஒடிசா மாநிலத்தில் 27 வயதுடைய ஹிந்துப் பெண்ணை 8 ஆண்டுகளாக காதலிப்பதாக நடித்து திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதியை அளித்த முஸ்லிம் இளைஞர் ஒருவர், அவரை மூளைச் சலவை செய்து முஸ்லிம் மதத்துக்கு மாற்றியதாக கோர்தா மாடல் காவல் நிலையத்தில் அந்த பெண் சமீபத்தில் புகார் அளித்தார். அந்த முஸ்லிம் இளைஞர் தனது உண்மையான அடையாளத்தை மறைத்து ஹிந்துவாக காட்டிக்கொண்டு தன்னுடன் உறவை வளர்த்துக் கொண்டதாகவும் அந்தரங்க வீடியோக்களை எடுத்துவைத்துக்கொண்டு அதனை வைரலாக்குவேன் என்று மிரட்டியதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், அந்த நபர், இதேபோல பல பெண்களை ஏமாற்றியுள்ளதாகவும் அவர்களில் ஒருவரை திருமணம் செய்ய தற்போது தயாராக உள்ளதாகவும், குற்றவாளிக்கு உள்ளூர் அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருப்பதால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறியுள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த நபரை கைது செய்துள்ளனர்.

இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் இந்த லவ் ஜிஹாத் வழக்கு வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, ஒடிசா மாநிலத்தில் லவ் ஜிகாத்துக்கு எதிராக இளைஞர்கள் குழு போராட்டம் நடத்தியது. போராட்டக்காரர்கள் அதற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ‘ஹிந்துப் பெண்களைக் காப்பாற்றுங்கள்’ மற்றும் ‘ஜகந்நாதரின் இந்த புனித பூமியில் லவ் ஜிகாத்தை பொறுத்துக்கொள்ள மாட்டோம்’ என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி போராடினர். ஒடிசா தொலைக்காட்சி அறிக்கையின்படி, போராட்டக்காரர்களில் ஒருவர், “நாங்கள் சமீபத்தில் கேரளா ஸ்டோரி திரைப்படத்தைப் பார்த்தோம், ஆனால் இதுபோன்ற ஒரு சம்பவம் எங்கள் சுற்றுப்புறத்திலேயே நடக்கும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை, அதுவும் தலைநகரான புவனேஸ்வரின் புறநகர்ப் பகுதியில். லவ் ஜிஹாத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம், மேலும் இதுபோன்ற சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் யார் என்பதைக் கண்டறிய அரசு நிர்வாகத்தை வலியுறுத்துகிறோம்” என்றார்.