தொடர்பில் இல்லாத மாநில அரசு

விவேக் பாண்டே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி, மகாராஷ்டிர முதல்வர், பிரதமருக்கு உத்தியோக பூர்வமாக எழுதிய கடிதங்களில் என்ன எழுதினார்? ஜூலை 2020 முதல் ஏப்ரல் 2021 வரை  கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கு உதவி கோரி மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு எத்தனை கடிதங்கள் எழுதி உதவி கோரினார்? என கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதில்  அளித்துள்ள அம்மாநில அரசு, ஆகஸ்ட் 2020 க்குப் பிறகு ஏழு மாதங்களாக முதல்வர் உத்தவ் தாக்கரே, பிரதமருக்கு எந்த கடிதமும் எழுதவில்லை. ஆனால், ஏப்ரல் 2021ல் தடுப்பூசி பெறுவதற்கு வயது வரம்பை 25  ஆக குறைப்பது, உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக தடுப்பூசிகளை வாங்க மாநிலங்களை அனுமதிக்க கோரிக்கை, மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட ரெம்டெசிவர் மருந்துகளை உடனடியாக வழங்க கோரிக்கை போன்ற கோரிக்கைக் கடிதங்களை மட்டுமே எழுதியுள்ளார் என தகவல் தெரிவித்துள்ளது. ஆனால், இக்காலகட்டத்தில் பிரதமர் ஆறுமுறை அனைத்து மாநில முதல்வர்களுடன் தொடர்பு கொண்டு கொரோனா  இரண்டாவது அலை, எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பூசி செலுத்துவது, பரிசோதனைகளை அதிகரிப்பது, நிடி ஆயோக் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கலந்தாலோசித்துள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.