சிறுதானியங்களை பிரபலப்படுத்தும் முயற்சிகள்

சர்வதேச அளவில், 2023ம் ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மறக்கப்பட்ட பழைமையான தானியங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, பல்வேறு முன்னெடுப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. ‘மைகவ்’ (MyGoV) இயங்குதளமானது பல்வேறு போட்டிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான மிக முக்கியமான மற்றும் வெற்றிகரமான ஊடகமாக மாறியுள்ளது. ‘மைகவ்’ மீதான ஈடுபாடு அதை மக்கள் இயக்கமாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும். பல போட்டிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. சில நடந்து வருகின்றன, மேலும் பல போட்டிகள் எதிர்காலத்தில் ‘மைகவ்’ தளத்தில் தொடங்கப்படும். மக்களிடையே சிறுதானியங்களின் ஆரோக்கிய நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, ‘பாரதத்தின் செல்வம், ஆரோக்கியத்திற்கான சிறுதானியங்கள்” என்ற கருப்பொருளுடன் காமிக் கதையை வடிவமைப்பதற்கான போட்டி செப்டம்பர் 5, 2022 அன்று தொடங்கப்பட்டது, இதில் ஊக்கமளிக்கும் வகையில் பதிவுகள் வரப்பெற்றுள்ளன. சிறுதானிய ஸ்டார்ட்அப் புத்தாக்க சவால்  செப்டம்பர் 10  அன்று தொடங்கப்பட்டது. இந்த முயற்சியானது சிறுதானிய சுற்றுச்சூழல் அமைப்பில் தற்போதுள்ள பிரச்சனைகளுக்கு தொழில்நுட்ப, வணிக தீர்வுகளை வழங்க இளைஞர்களை ஊக்குவிக்கிறது. இந்தப் போட்டி நிகழ்ச்சி  2023 ஜனவரி 31, வரை நடைபெறும். வலுவான சிறுதானியங்கள் வினாடி வினா போட்டி சமீபத்தில் தொடங்கப்பட்டது. இது சிறுதானியங்களின் நன்மைகள் அடிப்படையிலான கேள்விகளை கொண்டுள்ளது. சிறுதானியங்களின் மற்றும் அதன் பலன்களை அடிப்படையாகக் கொண்ட கேள்விகள். போட்டி  அக்டோபர் 20 அன்று முடிவடைகிறது.