மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக அரசியல் உள் நோக்கங்களோடும் எதிர்கட்சிகளின் ஆதரவோடும் போராடிவரும் விவசாய போராளிகள் பல மாதங்களாக டெல்லி அருகே திக்ரி எல்லையில் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 12 அன்று அங்கு சென்ற ஒரு சிறுமியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. அந்த சிறுமி கடந்த ஏப்ரல் 30ல் உடல் நிலை மோசமடைந்து இறந்துவிட்டாள். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, கவிதா ஆர்யா, யோகிதா சுஹாக் என்ற இரண்டு பெண்கள், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களான அனூப் சிங் சனாத், அனில் மாலிக் மேலும் அங்கூர் விவசாய போராட்டத்தை சமூக ஊடக பொறுப்பாளர்களான சங்வானா ஜெகதீஷ் சிங் பரார் என்ற ஆறு பேர்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளார். இதன் காரணமாக, ‘கிசான் சம்யுக்த் மோர்ச்சா’ என்ற அமைப்பு போராட்டத்தில் இருந்து விலகிவிட்டது. போராட்ட தலைவர்களான ராகேஷ் திகாயத் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் தற்போதுவரை இந்த பிரச்சினையில் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர்.