ஆப்கானிஸ்தானை சேர்ந்த சீக்கிய, ஹிந்து பிரதிநிதிகள் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி நன்றி தெரிவித்தனர். அப்போது அவர்களிடம் பிரதமர், நீங்கள் விருந்தாளிகள் அல்ல, இது உங்கள் தாய்நாடு என்று குறிப்பிட்டார். இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், முன்னாள் பஞ்சாப் துணை முதல்வரின் சிறப்பு அதிகாரியுமான பர்மிந்தர் சிங் ப்ரார், மத்திய அரசால் தலிபான்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட சீக்கியர்கள் தங்கள் நன்றியைத் தெரிவிக்கும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், ‘உலகில் இது சாத்தியமாகாது என்ற எதாவது இருந்தால், அது நரேந்திர மோடியால் சாத்தியமாகும். அவர் நமக்கு எவ்வளவு உதவியாக இருந்தார். நம் மீது மறக்க முடியாத அன்பை பொழிந்தார்’. ‘நான் காபூலில் குருத்வாராவில் சேவை செய்தேன். தலிபான்கள் என்னை கடத்திச் சென்றனர். நான் இன்று உயிருடன் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’. ‘பாரதத்திற்கும் உதவிய பிரதமர் மோடிக்கும் நன்றி’. ‘பாதிக்கப்பட்ட மக்களுடன் சேர்த்து, 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப், ஸ்ரீமத்பகவகீதை, ராமாயணம் போன்றவற்றின் பிரதிகள், கலாச்சார பாரம்பரிய பொருட்களையும் அவர் மீட்டார்’. ‘சி.ஏ.ஏ பிரச்சனை உட்பட எங்களின் பல பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானிய ஹிந்துக்கள், சீக்கியர்கள் மட்டுமல்ல, அங்குள்ள முஸ்லிம்களும் அவரை மிகவும் நேசிக்கிறார்கள்’ என பலர் இதில் பேசியுள்ளனர்.