ஐ.ஐ.எம்-பி’யில் ஷைலஜா டீச்சர் உரை

கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர், ஐ.ஐ.எம்.பி எனப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் பெங்களூருவில் வரும் ஜூலை 10 அன்று ‘கோவிட் -19 தொற்றுநோயை நிர்வகித்தல், கொள்கை தாக்கங்களில் அதன் விளைவுகள்’ என்ற தலைப்பில் ஒரு சொற்பொழிவை நடத்துகிறார்.

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அவர் சிறந்து விளங்கியதாக, இடதுசாரிவாதிகள், லிபரல்கள் என சிலர் அவரை புகழ்ந்தனர். பாரதத்திற்கு எதிரான கருத்தை கொண்ட ஜார்ஜ் சோரஸ் தலைமையிலான கல்லூரியும் பத்திரிகையும் அவருக்கு ‘Top Thinker of the Year 2020’ என்ற விருதை வழங்கியது.

ஆனால், கள நிலவரம் என்னவோ வேறு மாதிரியாகத்தான் இருக்கிறது. கொரோனாவின் முதல் அலை, இரண்டாவது அலையின்போது, மக்கள்தொகை, பரப்பளவு விகிதாச்சார அடிப்படையில், கொரோனா மையமாக கேரளா என்ற சிறிய மாநிலம் திகழ்ந்தது. அதன் தாக்கம் தமிழகம், கர்நாடகாவையும் பாதித்தது. அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. பல கொரோனா மரணங்கள் மூடிமறைக்கப்பட்டது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டது. இரண்டாம் அலையில், ஒரு நாளைக்கு 43,000 வரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போதுவரை அங்கு கொரோனா பாதிப்பு தோராயமாக 12 ஆயிரமாக உள்ளது. 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அவரை அப்பதவியில் இருந்து முதல்வர் பினராயி விஜயன் நீக்கினார்.

உண்மை நிலை இப்படி இருக்கையில், ஐ.ஐ.எம் – பெங்களூரு போன்ற நாட்டின் முதன்மையான கல்வி நிறுவனங்கள்கூட லிபரல்கள், போலி மதச்சார்பற்றவாதிகள், இடதுசாரிகளின் தவறான பிரச்சாரத்திற்கு பலியாகின்றன என்பது வருந்தத்தக்கது.