வீடுகள் கட்டிக்கொடுத்த சேவாபாரதி

கடந்த ஜனவரி 2020ல் தெலுங்கானா மாநிலம், பைன்சா பகுதியில் முஸ்லிம்கள் கும்பல் ஒன்று, அங்கு வாழும் ஏழை ஹிந்துக்கள் மீது ஒரு திட்டமிட்ட கொடூர தாக்குதலை நடத்தியது. இதில் பலர் பாதிக்கப்பட்டனர். ஹிந்துக்களின் 10 வீடுகள், பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. 12 வீடுகள் சிறிது சேதமடைந்தன.

இதனை அறிந்த அம்மாநில சேவா பாரதி அமைப்பு, துரிதமாக செயல்பட்டு பாதிக்கப்பட்டவர்களை மீட்டது. 22 குடும்பத்தினருக்கு உணவு தானியங்கள், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை உடனடியாக வழங்கியது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு பத்து புதிய வீடுகளை கட்ட முடிவு செய்தனர் சேவாபாரதி தொண்டர்கள். இதற்காக, தெலுங்கானா மாநில சேவா பாரதி, கேசவ சேவா சமிதி, பல நன்கொடையாளர்கள் ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்த பணிகள் முடிவடைந்ததை அடுத்து, பைன்சா கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட 10 வீடுகளை சேவா பாரதி வழங்கியது. வெகுஜன கிரஹ பிரவேசம் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அகில பாரதிய சேவா பிரமுகர் பரக் அபயங்கர், ஹிந்துக்களிடையே ஒற்றுமைக்கான அவசரத் தேவையை வலியுறுத்தினார். ஹிந்து சமூகம் தன்னம்பிக்கை, பரஸ்பர ஒத்துழைப்பு, தாராள மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என கூறினார். மேலும், சேவா பாரதி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சமூக சேவை நடவடிக்கைகள், திட்டங்களையும் விளக்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆதிலாபாத் நாடாளுமன்ற உறுப்பினர் சோயம் பாபு ராவ், தெலுங்கானா ஆர்.எஸ்.எஸ் தலைவர் பர்லா தக்ஷிண மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.