சேவைகள் துறை வளர்ச்சி

நிறுவனங்களைப் பொறுத்தவரை, ஒட்டுமொத்த செலவுகள் மிகவும் அதிகரித்திருப்பதாக தெரிவித்து உள்ளன. தகவல் தொழில்நுட்பம், உணவு விடுதி, சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு. ரியல் எஸ்டேட், வர்த்தகம் உள்ளிட்ட, சேவை துறையை சேர்ந்த நிறுவனங்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், கடந்த பிப்ரவரியில், சேவைகள் துறையின் வளர்ச்சி 55.3 புள்ளிகளாக உயர்வடைந்து உள்ளது. இது ஜனவரியில், 52.8 புள்ளிகளாக இருந்தது. எனினும், வேலைவாய்ப்புகளில் சற்று சரிவு ஏற்பட்டு உள்ளது என இந்த ஆய்வை மேற்கொண்ட ஐ.எச்.எஸ் மார்க்கிட் நிறுவனத்தின், நிக்கி – மார்க்கிட் தெரிவித்துள்ளது.