தொடர் கோயில் இடிப்பு

சென்னை தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் அருகே நரஸிம்ம ஆஞ்சநேயர் ஆலயத்தை, தி.மு.க தலைமையிலான தமிழக அரசு இடிக்க முற்பட்டது. எப்போதும் போல இப்போதும் ஹிந்துக்களின் ஆலயம் மட்டுமே அரசு விதிகளுக்கு மாறாக கட்டியுள்ளதாகவும் அதனை இடிக்க போவதாக கடந்த 17.12.2121 இரவில் தகவல் தெரிவித்துவிட்டு மறுநாள் காலையில் அவசர அவசரமாக இடிக்க முற்பட்டது. இது அங்கு வாழும் ஹிந்துக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி, பா.ஜ.க உள்ளிட்ட அமைப்புகளுடன் மக்களும் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, கோயில் இடிப்பை தள்ளிவைத்துள்ளது தி.மு.க அரசு. ஹிந்து ஆலயங்களை மட்டுமே குறிவைத்து இடித்துவரும் தி.மு.க அரசு, தமிழகத்தில் தெருவெங்கும் கிருஸ்தவர்களும் முஸ்லிம்களும் கட்டியுள்ள சட்டவிரோத கட்டிடங்கள் பல்லாயிரம் இருக்க, அவற்றில் இருந்து ஒரு செங்கலைக்கூட அகற்றமுடியாத அரசாகவே இன்றுவரை உள்ளது. ஆனால், ஹிந்துக்களின் கோயில்களை மட்டும் தொடர்ந்து இடித்து வருவகிறது. இச்செயல், தி.மு.கவின் ஹிந்து விரோத மனப்பான்மையையே வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.