சுயசார்புக்கான பட்ஜெட் இது

மத்திய பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டை, தொழிலதிபர்களுக்கு ஆதரவான பட்ஜெட்டாக காட்ட எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றனர். உண்மை தகவலை மறைத்து பொய் தகவலை பரப்பி வருகின்றனர். 800 மில்லியன் மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கப்பட்டது. 80 மில்லியன் பேருக்கு இலவச காஸ் சிலிண்டர் வழங்கப்பட்டது. பிரதமரின் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 1.67 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. விவசாயிகள், பெண்கள், ஏழை மக்கள் என 400 மில்லியன் பேருக்கு, நிதியுதவி அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 1.67 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இது பணக்காரர்களுக்கானதா, பணக்காரர்களுக்கு ஆதரவான அரசு என்றால் ஊரக சாலைகளுக்கு பணம் செலவு செய்யப்படுமா? டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு ஊக்கம் அளிப்பது ஏழைகளுக்கு உதவவே, பணக்காரர்களுக்காக அல்ல. வருமான வரி செலுத்துபவர்களை அரசு மதிக்கிறது. தொழில்துறை வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பட்ஜெட்டில் அம்சங்கள் உள்ளன. விவசாயிகள் நலனை காத்திட மோடி அரசு உறுதிபூண்டுள்ளது. பட்ஜெட்டில் தைரியமாக பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது சுயசார்புக்கான பட்ஜெட், சிறந்த பட்ஜெட்’ என தெரிவித்தார்.