ஸ்கூல் ஆப் ராம்

பகவான் ஸ்ரீராமர் பற்றிய செய்தியை பரப்புவதற்கான ‘ஸ்கூல் ஆப் ராம்’ என்ற மெய்நிகர் பள்ளியை நிறுவியுள்ளார் வாரணாசியின் இளவரசர் திவாரி. இன்று துவக்கி வைக்கப்படும் இந்த பள்ளியில், ராமாயணம், ராமரின் வாழ்க்கை, அவரது போதனைகள் குறித்த பல்வேறு அம்சங்களுடன் தொடர்புடைய மெய்நிகர் வகுப்புகள் இடம்பெறும். தேர்வு, மதிப்பீட்டு முறைகளும் உண்டு. ‘மகாத்மா காந்தி அந்தராஷ்டிரிய ஹிந்தி விஷ்வ வித்யாலயா’வின் துணைவேந்தர் பேராசிரியர் ராஜ்னிஷ் சுக்லா, பள்ளியைத் திறந்து வைக்கிறார்.  ‘குடும்ப ஒற்றுமையின் அத்தியாவசியத்தை உணர்த்தி அதன் மூலம் சமூகத்தில் வளர்ச்சியை உருவாக்குவதே இந்த பள்ளியின் நோக்கம். பல்வேறு காரணங்களால், தற்போது நம் தேசத்தில் குடும்ப உறவுகள், ஒற்றுமை பாதிப்புக்கு உள்ளாகின்றன. இந்த வகுப்புகள்  குடும்ப மதிப்புகளையும் அதன் முக்கியத்துவத்தையும் இளைய தலைமுறையினருக்கு புரியவைக்க உதவும்’ என்று இளவரசர் திவாரி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறினார்.