சார்தாம் யாத்திரை ரத்து

வருடம் தோறும் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புண்ணிய தலங்களுக்கு ஹிந்துக்கள் அதிக அளவில் பயணிக்கும் சார்தாம் யாத்திரை, கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் இந்த ஆண்டு நிறுத்தப்படுவதாக உத்தரகண்ட் அரசு அறிவித்துள்ளது. எனினும் இந்த புனித தலங்களில் நித்திய பூஜைகளை அக்கோயில் பூசாரிகள் மட்டுமே செய்வார்கள், அதில் கொரோனா தொடர்பான அரசு வழிகாட்டுதல்கள் கட்டாயம் கடைபிடிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. முன்னதாக இந்த புனித யாத்திரைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் உத்தரகாண்ட் அரசு ஏற்பாடு செய்து வந்தது. அதற்கான அனைத்து நிலையான வழிகாடுதல் குறிப்புகளும்கூட அறிவிக்க தயாராகி இருந்தன என்பதும் இதனை குறித்த செய்தி நம் விஜயபாரதம் மின்னிதழில் வெளிவந்ததும் நினைவில் கொள்ளத்தக்கது.