சபர்மதியில் சுதந்திர கொண்டாட்டம்

பாரதத்தின் 75வது சுதந்திர தினம் வரும் 2022ல் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான கொண்டாட்டத்தை, குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார். இந்த நிகழ்வில் அனைத்து எம்.பிக்களும் பங்கேற்க மோடி அழைப்பு விடுத்துள்ளார். அதன் துவக்க விழா குஜராத்தின் சபர்மதி ஆசிரமத்தில் இன்று துவங்குகிறது. நாட்டின் 75 இடங்களில் 75 வாரங்களுக்கு இந்த கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டிக்கு 21 நாட்கள் நடை பயணத்தையும்  மோடி துவக்கி வைக்கிறார்.