சபரிமலை ஆடி மாத பூஜை

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆடி மாத பூஜைக்காக நேற்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார். வரும் 21ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். முன்பு கொரோனா கட்டுப்பாட்டால் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது ஊரடங்கு தளர்வையொட்டி தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு முறையில் சாமி தரிசனத்திற்கு 17ம் தேதி முதல் அனுமதிக்கப்படுவார்கள். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான ஆன்லைன் சான்றிதழை கொண்டு வர வேண்டும். பக்தர்களுக்கான மருத்துவ சான்று மற்றும் ஆன்லைன் சான்றிதழ் பரிசோதனை நிலக்கல்லில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.