ஆர்.டி.ஓ அலுவலகம் செல்ல வேண்டாம்

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், மார்ச் 4ல், குடிமக்களுக்காக ஆதார் அங்கீகார அடிப்படையிலான நேரடி தொடர்பில்லா சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஓட்டுநர் உரிமம், நகல் உரிமம், பதிவு சான்றிதழ் விண்ணப்பம், பதிவு சான்றிதழ் என்.ஓ.சி, வாகன உரிமை மாற்றுதல், வாடகை ஒப்பந்தம் புதிய ஒப்புதல், வாடகை ஒப்பந்த ரத்து, கற்பவர் உரிமம், ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்தல், முகவரி மாற்றம், சர்வதேச ஓட்டுநர் அனுமதி, தற்காலிக வாகனப் பதிவு உள்ளிட்ட 18 வகையான சேவைகளுக்கு இனி ஓட்டுனர் பயிற்சி மையம், ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு நேரில் சென்று கால் கடுக்க காத்திருக்கத் தேவையில்லை. இந்த சேவைகளை பொதுமக்கள் சாலைப் போக்குவரத்துத்துறையின் இணையதளத்தில் ஆதார் அட்டையை பயன்படுத்தி நேரடியாகவே பெற முடியும். இதனால் பொதுமக்களின் நேரம் பெருமளவு சேமிக்கப்படுவதுடன் லஞ்ச ஊழல்களும் பெருமளவு குறையும்.