கொரோனா நோயாளிகளுக்கு ஆர்.எஸ்.எஸ் உதவி

ராஷ்ட்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்), இரு தினங்களுக்கு முன் சமர்த் பாரத் திட்டத்தின் கீழ் புனே, கார்வே நகரில் உள்ள மகரிஷி கார்வே ஸ்திரி ஷிக்ஷன சமஸ்தாவில் உள்ள பையா கார்வே ஹாஸ்டலில் 450 படுக்கைகள் கொண்ட கொரோனா நோயாளிகள் பராமரிப்பு மையத்தை, புனே முனிசிபல் கார்ப்பரேஷன் (பி.எம்.சி) மற்றும் ஜன்கல்யன் சமிதி விவேக் வியாஸ்பீத் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து திறந்துள்ளது. இந்த மையத்தில், அறிகுறியற்ற, ஆனால் பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட, வீட்டு தனிமைப்படுத்தலுக்கு இடமில்லாத நோயாளிகள் அனுமதிக்கப்படுவார்கள். இங்கு ஒரு அறையில் மூன்று நோயாளிகள் தங்கவைக்கப்படுவார்கள். அவர்களுக்கு தேநீர், சிற்றுண்டி, உணவு, மருந்துகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். இவர்களுக்கு உதவ, சஹாயத்ரி மருத்துவமனையைச் சேர்ந்த எட்டு பேர் அடங்கிய மருத்துவ நிபுணர்கள் குழுவும் துணையாக, 25 பயிற்சி பெற்ற உறுப்பினர்களும் 24 மணி நேரமும் தயாராக இருப்பார்கள்.