கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒரு இணையவழி கருத்தரங்கில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதியை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பி.எல்.ஐ) திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் உற்பத்தியை 520 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும். தகவல் தொழில்நுட்பம், ஹார்டுவேர், தொலைதொடர்பு சாதனங்களின் உற்பத்தி அடுத்த நான்கு ஆண்டுகளில் மூன்று டிரில்லியன் மதிப்பாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பி.எல்.ஐ திட்டத்தினால் பயனடையும் துறைகளில் தற்போதைய தொழிலாளர்கள் இருமடங்காக அதிகரிக்கும். வணிகத்தை மேலும் சுலபமாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும், தொழில்துறைக்கான தளவாடச் செலவுகளைக் குறைப்பதற்கும் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.