ஷாகாவுக்கு செல்லாத சங்கி

‘தி பேக்கிங் நியூஸ்’ என்ற ஒரு நையாண்டி செய்தி வலைத்தளத்தின் நிறுவனரும் ஓப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ராகுல் ரூஷன் தன் அனுபவங்களை தொகுத்து ஷாகாவுக்கு செல்லாத சங்கி (Sanghi Who Never Went To A Shakha) என்ற ஒரு புத்தகம் வெளியிட்டார். அது தற்போது மிகவும் பரபரபாக விற்பனையாகிறது. விற்க அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்தில் அமேசானில் அது காலியாகிவிட்டது. ராகுல் முதலில் சங்கி என்ற வார்த்தையை வெறுத்தவர். இவரது குடும்பத்தினர் பாரம்பரியமாக காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருந்துள்ளனர். பல பத்திரிகையாளர்கள் போலவே இவரும் சோசலிச கொள்கையை உடையவர். ஆனால், காங்கிரசும் அவர்களது கூட்டணியினரும் செய்யும் அராஜகங்கள், ஊழல்களைப் பார்த்து மனம் வெதும்பினார். பின் அவரது பார்வை ஆர்.எஸ்.எஸ் மீதும் பா.ஜ.கவின் மீதும் திரும்பியது. அவர்களது தன்னலமற்ற தியாகங்கள், தேசபக்தி போன்றவை கவர்ந்ததால் அவர்களின் தீவிர ஆதரவாளராகவே மாறினார். இதில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களின் தொகுப்பாகவே இப்புத்தகம் வெளியாக மக்களின் அமோக ஆதரவை பெற்று வருகிறது.