பழிவாங்கும் காங்கிரஸ்

பஞ்சாபில் சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நகைச்சுவை நடிகர் சங்கேத் போசாலே அவரது மனைவி சுகந்தா மிஸ்ரா மீது கொரோனா விதிமுறைகளை மீறியதாக காங்கிரஸ் தலைமையிலான பஞ்சாப் அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆனால் அந்த திருமணத்தில் அவரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டிருந்தனர். சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த குளிர்பான நிறுவனமான ஸ்டோரியா புட்ஸ் அண்ட் பெவரேஜஸ் நிறுவனம், தனது புதிய ‘மில்க் ஷேக்’ விளம்பரத்தை வெளியிட்டது. அந்த விளம்பரம், காங்கிரஸ் தலைவர்களான சோனியா, ராகுலை கேலி செய்யும் விதத்தில் இருந்ததாக கூறி மகாராஷ்டிராவில் அந்த நிறுவனத்தை அடித்து உடைத்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்தனர் அம்மாநில காங்கிரஸ் கட்சி குண்டர்கள். அந்த விளம்பரத்தில் ராகுலாக நடித்தவர் சங்கேத் போசாலே. எனவே, அவரின் மீதான இந்த வழக்கு ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாகவே தெரிவதாக சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.