கோயில்களில் மதவாத போஸ்டர்கள்

தமிழக கோயில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க தொடங்கப்பட்ட மக்கள் பிரச்சாரமும் தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் ‘இயேசுவே தமிழகத்தை ஆசீர்வதியும்’ என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. ‘கோவில் அடிமை நிறுத்து’ பிரச்சாரம் மக்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை சகிக்காமல் பல அரசியல் கட்சியினர், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், கிரிப்டோ கிறிஸ்டியன்கள் இணைந்து ‘கோயில்கள் தமிழருக்கு சொந்தம்’ என்ற கருத்தைப் பரப்பி வருகின்றனர். மேலும் ‘கோவில் அடிமை நிறுத்து’ பிரச்சாரத்தை துவங்கிய ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் குறித்து அவதூறு பரப்பி வருகின்றனர்.

இந்நிலையில் ‘இயேசுவே தமிழகத்தை ஆசீர்வதியும்’ என்ற போஸ்டர்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஒரே சமயத்தில் ஒட்டப்பட்டுள்ளது. பல கோயில்களிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது ஹிந்துக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, ‘கோயில் சுவற்றில் மற்றும் அருகில் ஒட்டியுள்ள மத சார்புடைய இந்த சுவரொட்டிகள் அகற்றப்படவில்லை எனில், இந்து மக்கள் கட்சி சார்பாக அனைத்து மத வழிபாட்டுத் தளங்களின் சுவர்களிலும், ‘தாய் மதம் திரும்பு சகோதரா உன் மனம் மாற்றத்தை விரும்பும் ஈஸ்வரன்’ என்று பதிலுக்கு ஒட்டப்படும்.’ என்று இந்து மக்கள் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

வேண்டுமென்றே கோயில்களுக்கு முன் ‘இயேசு ஒருவரே கடவுள்’ என்பது போன்ற துண்டு பிரசுரங்கள் வழங்குவது, மதப்பிரச்சாரம் செய்வது, கோயில்களுக்கு தீர்த்தங்களுக்கு அருகே ஞானஸ்நானம் செய்து மதம் மாற்றுவது, கோயில் கல்வெட்டுகளில் மதமாற்றப் பிரச்சார நோட்டீஸ் ஒட்டுவது, கோயில் அருகே, மலைகளில் சிலுவை வரைவது என்று தொடர்ந்து ஹிந்துக்களை சீண்டுவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆண்டுக்கு ரூ.2.000 கோடி என்ற அளவில் தமிழகத்தில் உள்ள சிறுபான்மை தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை சமூக சேவை என்ற‌ பெயரில் மதமற்றம், வன்முறையை தூண்டுதல் போன்ற காரணங்களுக்காவே பயன்படுத்தப்படுகின்றன.

அடுத்து தி.மு.க ஆட்சிக்கு வந்து விடும் என்ற நினைப்பிலும் அப்படி வந்தால் நம்மை யாரும் கேள்வி கேட்கமுடியாது என்ற தைரியத்திலும் இந்த சிறுபான்மை அமைப்புகள் தங்கள் வேலையை வெளிப்படையாகவே ஆரம்பித்து விட்டனவோ என்ற அச்சத்தையும் இந்த போஸ்டர் ஒட்டிய நிகழ்வு ஏற்படுத்தி உள்ளது.