மீளும் பாரதப் பொருளாதாரம்

கொரோனா 2-வது அலை காரணமாக முன்னெடுக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் முடங்கிய பொருளாதாரம் விரைவாக மீண்டு வருவதாக இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. தொழில் துறையைச் சேர்ந்த 60 சதவீத தலைமைச் செயல் அதிகாரிகள், கொரோனா முதல் அலை பாதிப்பைவிட 2-வது அலையில் விரைவான மீட்சி தெரிவதாகக் கூறியுள்ளனர். நுகர்வோர் நடவடிக்கை அதிகரித்துள்ளதால் பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. 2-வது அலையால் முடங்கிப் போன தொழில் நடவடிக்கைகளில் தற்போது 60% அளவுக்கு முன்னேறியுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ஏற்றுமதி பெரிதாக பாதிக்கப்படவில்லை என்று 81% ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.