ராவணனின் விமானம்

இரண்டு வருடங்களுக்கு முன்பு, விமானப் போக்குவரத்து வல்லுநர்கள், வரலாற்றாச்சியர்கள், தொல்லியலாளர்கள், அறிவியலாளர்கள், புவியியலாளர்கள் பங்கேற்ற மாநாடு இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெற்றது. அதில், ராவணனின் விமானப் போக்குவரத்து குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான யோசனை பிறந்தது. இதற்கான ஆராய்ச்சி மேற்கொள்ள 5 மில்லியன் இலங்கை ரூபாயை முதற்கட்ட நிதியாக அன்றைய அரசு ஒதுக்கியது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அந்த ஆய்வு நிறுத்தப்பட்டது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக கருதி இதனைத் தொடர்வதற்கு ராஜபக்சே தலைமையிலான தற்போதைய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஆய்வுகள் அடுத்த ஆண்டுகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரதம் இலங்கை என இருநாடுகளுக்கும் முக்கியமாக இருக்கும் இந்த ஆய்வில் பாரதமும் பங்கற்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.