ராஜமாதா ஜிஜாபாய்க்கு பிரதமர் மரியாதை

ராஜமாதா ஜிஜாபாயின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை  செலுத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சத்ரபதி சிவாஜி மகாராஜ் போன்ற ஒரு சிறந்த ஆளுமைக்கு வழிகாட்டிய அவரது பெயர் எப்போதும் நம் வரலாற்றில் இடம்பெறும் என்று கூறியுள்ளார். இதுகுறித்த பிரதமரின் டுவிட்டர் பதிவில், “ராஜமாதா ஜிஜாவு என்றால் பொறுமையின் பிறப்பிடம் என்று பொருள் கொள்ளலாம். பெண் சக்தியை ஜிஜாவிடமிருந்து பார்க்கலாம். சத்ரபதி சிவாஜி மகாராஜை உருவாக்கிய வழிகாட்டியாக அவரது பெயர் என்றும் நம் வரலாற்றில் சேர்க்கப்படும். மக்கள் நலனுக்காக எப்போதும் பாடுபட்ட அவரது பிறந்தநாளில் அவருக்கு வணக்கம்” என தெரிவித்துள்ளார்.