ரயில்வே முன்னோடி ஏல நடைமுறை

வர்த்தக வருவாய் மற்றும் கட்டணமில்லாத வருவாய் ஒப்பந்தங்களுக்கான மின்னணு ஏல முறைக்கு முன்னோடி திட்டத்தை இந்திய ரயில்வேத்துறை தொடங்கியுள்ளது. 9 மண்டல ரயில்வேக்களின் 11 கோட்டங்களில் வர்த்தக வருவாய் மற்றும் கட்டணமில்லாத வருவாய் ஒப்பந்தங்களுக்கான மின்னணு ஏல முறைக்கு முன்னோடி திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது. அதில், ஐ.ஆர்.இ.பி.எஸ் மூலம் மட்டுமே இணையவழியாக மின்னணு ஏலம்  நடைபெறும். ஒப்பந்ததாரர்கள், விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யவும், பங்கேற்கவும் புவி எல்லைக்கட்டுப்பாடு ஏதுமில்லை. ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்தல், ஒப்பந்தம் ஏற்பட தவறினால் விரைந்து மறு ஏலம் விடுதல் போன்ற பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. கூடுதல் தகவல்கள்களுக்கு www.ireps.gov.in. என்ற ஐ.ஆர்.இ.பி.எஸ் இணையதளத்தை அணுகலாம்.