நாடாளுமன்றத்தில் புதன்கிழமை பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக் கொள்கைகளால் சீனாவும் பாகிஸ்தானும் முன்னெப்போதையும் விட நெருக்கமாக உள்ளன. பாரதம் தனிமைப்படுத்தப்பட்டு எதிரிகளால் சூழப்பட்டுள்ளது என்று கூறினார். இது சம்பந்தமான செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், “பாகிஸ்தான் சீனாவின் உறவு குறித்து அவர்களே முடிவு செய்யட்டும். அதனை அவர்களிடமே விட்டுவிடுகிறேன். அந்த கருத்துக்களை நான் நிச்சயமாக ஆதரிக்க மாட்டேன்” என தெரிவித்து ராகுலை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளார்.