ராகுலின் அசட்டுத்தனம்

ஹார்வர்டின் ஜான் எப். கென்னடி ஸ்கூல் ஆப் கவர்ன்மென்ட்டில் டிப்ளமசி மற்றும் சர்வதேச அரசியல் பயிற்சி பேராசிரியராக இருக்கும் பர்ன்ஸ் கிரேக்கத்திற்கான முன்னாள் அமெரிக்க தூதராக இருந்தார். இவருடனான ஒரு இணையவழி உரையாடலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாரதத்தில் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் உள்ளது.  அதில் அமெரிக்கா தலையிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனால், பர்ன்ஸ் அதிர்ச்சியடைந்தார். தன் நாட்டு உள்விவகாரங்களில் மற்றொரு நாட்டை சேர்ந்தவர்களை தலையிடச் சொல்லும் ராகுலின் இந்த அரசியல் முதிர்ச்சியற்றத் தன்மை, பாரதத்தில் மட்டுமல்ல, உலக அளவில் அவருக்கும் அவரது காங்கிரஸ் கட்சிக்கும் அவமானத்தை பெற்றுத்தந்துள்ளது.