கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்கள் மூடப்படுவதாக தமிழக அரசு முன்னர் அறிவித்திருந்தது. சமீபத்தில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், வழிபாட்டு தலங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. இதனால் மக்கள் குழப்பம் அடைந்திருந்தனர். இந்நிலையில், வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என தமிழக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. பள்ளிகள் திறந்து ஒருவாரம் கழித்து கொரோனா தாக்கம் குறைந்தால் வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.