தனியார் ஆம்புலன்ஸ் கட்டணம்

‘கொரோனா நோயாளிகளை அழைத்து செல்ல தனியாரின் சாதாரண ஆம்புலன்ஸ்களில் முதல் 10 கி.மீக்கு ரூ.1,500ம் கூடுதலாக செல்லும் ஒவ்வொரு கி.மீக்கும் தலா ரூ.25 ஆகவும், ஆக்ஸிஜன் உள்ளிட்ட அடிப்படை உயிர்காக்கும் கருவிகள் கொண்ட ஆ்மபுலன்ஸ்களுக்கு முதல் 10 கி.மீ.,க்கு 2 ஆயிரம் ரூபாய், கூடுதலான ஒவ்வொரு கி.மீக்கும் தலா ரூ.50 ஆகவும், வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆமபுலன்ஸ்களுக்கு முதல் 10 கி.மீக்கு ரூ.4 ஆயிரம், ஒவ்வொரு கூடுதல் கி.மீ.,க்கும் ரூ.100 ஆகவும் தமிழக அரசு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது’ என தமிழக சுகாதாரத்துறை செயலர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.