பொது இடங்களை ஆக்கிரமித்து தொழுகை

குஜராத் மாநிலம், வதோதராவின் மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக் கழகத்தின் சில முஸ்லிம் மாணவர்கள் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள சம்ஸ்கிருத மகாவித்யாலயாவுக்கு வெளியே தொழுகை நடத்தும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்கலைக் கழகத்தின் வணிகவியல் பிரிவில் படிக்கும் மாணவர்கள் பல்கலைக் கழக வளாகத்தில் தொழுகை நடத்தினர். மாணவர்களைத் தவிர, பல்கலைக் கழகத்தில் மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் எனக் கூறப்படும் முஸ்லீம் தம்பதிகளும் சமீபத்திய சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அதே சமஸ்கிருத மகாவித்யாலயாவிற்கு வெளியே நமாஸ் செய்தனர். இந்த தம்பதியினர் வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், டிசம்பர் 24ம் தேதி நடைபெற்ற சிசிசி தேர்வில் கலந்து கொள்ளவிருந்த தங்கள் மகன், மகளுடன் மகாவித்தியாலயத்திற்கு அருகிலுள்ள மற்றொரு கட்டிடத்தில் வந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், பல்கலைக் கழக கண்காணிப்பு குழு, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கட்டிடத்தில் தேர்வுகள் நடந்து வருவதால், சட்டம் ஒழுங்கை பராமரிக்க காவல்துறையை அழைத்ததாக எம்.எஸ் பல்கலைக் கழகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி லகுலிஷ் திரிவேதி தெரிவித்தார். மேலும், அங்கு தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இது ஒரு கல்வி நிறுவனம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் வளாகத்தில் இதுபோன்ற செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்” என்று அவர் கூறினார். இந்த விஷயத்தை அறிந்த சில ஹிந்து அமைப்பினர் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தன. அதற்கு பதிலடியாக வளாகத்தில் ஹனுமான் சாலிசாவை ஓத ஆரம்பித்தன. மேலும், துணைவேந்தர் அலுவலகத்துக்குச் சென்று, இதுகுறித்து விசாரணை நடத்தக் கோரி முழக்கங்களை எழுப்பினர். இது தொடர்பாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பும் புகார் அளித்துள்ளது. பல்கலைக் கழகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.