தேசியக்கொடி மீது தொழுகை

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இந்திய தேசியக் கொடியை அவமதித்ததாக முகமது தாரிக் அஜீஸ் என்பவரை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். எனினும் அவர் அதே நாளில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட முகமது தாரிக் அஜீஸ், அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். துபாயில் இருந்து வந்த அவர் மற்றொரு விமானம் மூலம் நாகாலாந்தின் திமாபூருக்குச் செல்ல காத்திருந்தார். அப்போது மாலை 5 மணியளவில் போர்டிங் கேட் 1 மற்றும் 3க்கு இடையே தரையில் இந்திய தேசியக் கொடியை விரித்து அதன் மீது நின்று தொழுகை நடத்தினார். இதை பார்த்த சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்புப் படையினர் அவரை விசாரிக்கையில், அவர் தனது செயலுக்கு திருப்திகரமான பதிலை அளிக்கவில்லை.  இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு டெல்லி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.