மஹாராஷ்டிராவில் இரு ஜைன அறக்கட்டளைகள் சார்பில், மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஜைன மதத்தினர், நாளை முதல் நவராத்திரி விழாவையொட்டி விரதம் இருப்பது வழக்கம். அக்காலகட்டத்தில், அவர்கள் மசாலா சேர்க்காத, வேக வைத்த குறிப்பிட்ட ஒருசில உணவுகளை மட்டுமே உண்பர். இந்த உணவை, மும்பையில் உள்ள 58 ஜைன கோயில்கள்தான் வினியோகிக்கும். தற்போதுள்ள கொரோனா கட்டுப்பாடுகளால், கோயில்களில் பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், உணவுப் பொட்டலங்களை வினியோகிக்க அனுமதி வழங்க வேண்டும். என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனு விசாரித்த, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.சி. குப்தே தலைமையிலான அமர்வு, உணவுப் பொட்டலங்களை பக்தர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று கொடுக்க ஒப்புதல் அளித்தது.