நிரந்தர வசிப்பிட சான்றிதழ்

‘ஜம்மு, காஷ்மீர் அரசு அளித்துள்ள தகவல்களின்படி, நிரந்தர வசிப்பிட சான்றிதழ் கேட்டு கடந்த 2020 டிசம்பர் 31 ஆம் தேதி வரை மொத்தம் 35,44,938 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன, அவற்றில் 32,31,353 விண்ணப்பதாரர்களுக்கு நிரந்தர வசிப்பிட சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. 2,15,438 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன’ என மாநிலங்களவையில் கேள்வி ஒன்றிற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி தெரிவித்தார்.