ஊடகத்தினரின் பாகிஸ்தான் ஆதரவு

ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆஃப் இந்தியா, பாரத வம்சாவளியை சேர்ந்த பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஹசன் சுரூருக்கு ‘அமன் கி ஆஷா’ என்ற ஒரு களத்தை உருவாக்கித் தந்தது. இவர் கடந்த 2015ல், அவர் ஒரு மைனர் பெண்ணை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததற்காக கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹசன் சுரூரின் டைம்ஸ் ஆப் இந்தியா கட்டுரை, ‘பொருளாதாரச் சரிவில் இருந்து தப்பிக்க பாகிஸ்தானியர்களுக்கு பாரதம் ஏன் தேவை’ என்று தலைப்பிடப்பட்டிருந்தது. அது பாரதத்தில் உள்ள நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளித்து அதனை காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தும் ஒரு கட்டுரையாகும்.

பாரத அரசு, பாகிஸ்தானின் சிவில் சமூகம் ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியை கண்டும் அலட்சியமாக இருப்பதாக சுரூர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மோடி அரசு, அரசியல் வேறுபாடுகளைக் காட்டிலும் இரக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் தீவிர துயரத்தில் உள்ள அண்டை நாட்டுக்கு உதவி செய்வதன் மூலம் நீடித்த பாரம்பரியத்தை உருவாக்க வேண்டும். அதன் தேசிய பாதுகாப்பு கவலைகளை அகற்றி அச்சுறுத்தல்களை புறக்கணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் பலமுறை துரோகம் செய்த போதிலும், பாகிஸ்தானுக்கு பாரதம் உதவ வேண்டும், ஏனெனில் பாரதத்தின் உதவி தேவைப்படுவது சாமானிய மக்களுக்கே தவிர, அதன் அரசியல் மற்றும் ராணுவ ஆட்சியாளர்களுக்கு அல்ல என்று வலியுறுத்த முயன்றார்.

வார்த்தை விளையாட்டு: பாகிஸ்தான் மக்கள் பழைய அண்டை நாட்டினர் அல்ல, அவர்கள் ஒரு காலத்தில் ஒரே குடும்பமாக இருந்தவர்கள் என்று உணர்ச்சிகளுடன் விளையாட முயன்றார். பிறகு, பாகிஸ்தானின் பொருளாதார சரிவு என்பது பாரதம் உட்பட அந்த பிராந்தியத்திலும் கடுமையான பாதுகாப்பு உள்ளிட்ட தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று கூறினார். இறுதியில், சுரூரால் பாகிஸ்தானின் உண்மையான குரூர முகத்தையும் அவர் காண்பித்தார். “ஹம் தோ தூப்பேங்கே சனம், தும் கோ பி லே ஜாயேங்கே” (நாங்கள் மூழ்கும்போது, அன்பே, நாங்கள் உங்களையும் கூட கீழே இழுத்துச் செல்வோம்) என்று உருது வாசகத்தைச் சேர்த்தார். இந்த வாசகம் 1965ம் ஆண்டு ஐ,நா பாதுகாப்பு கவுன்சிலில் சுல்பிகர் அலி பூட்டோவின் உரையை நினைவூட்டுகிறது, அதில் பாகிஸ்தான் அதன் அளவு மற்றும் வளங்களைப் பொருட்படுத்தாமல் இறுதி வரை பாரதத்துக்கு எதிராக ஆயிரம் ஆண்டுகள் போரை நடத்தும் என்று கூறியிருந்தார்.

பயங்கரவாத பாகிஸ்தான்: பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் பாரதத்துக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தும், போர்களை நடத்தியும், எப்போதும் விரோதப் போக்கை கடைப்பிடித்தும் வரும் ஒரு பயங்கரவாத எதிரி நாடாகும். பாரதத்தின் ராணுவ வீரர்களை கொல்வது, அப்பாவி மக்களை கொல்வது, பொருளாதாரச் சீரழிவை ஏற்படுத்துவது, பயங்கரவாதத்தை தூண்டுவது, போதை மருந்து, கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவது என தேசப்பிரிவினை காலம் முதல் இன்றுவரை பாகிஸ்தான் பாரதத்திற்கு இழைத்து வரும் அநீதிகளுக்கு அளவே இல்லை. பொருளாதாரச் சரிவு மற்றும் திவால்நிலையின் விளிம்பில் இருக்கும் போது கூட, பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், “பாகிஸ்தான் ஒரு அணுசக்தி நாடு, பாரதம் எங்களை தீய கண்ணால் பார்க்க முடியாது. அதை வெளியே எடுக்கவும், காலுக்குக் கீழே நசுக்கவும் எங்களுக்கு அதிகாரம் உள்ளது” என்று சமீபத்தில் கூறியிருந்தார். இந்த சூழலில், ஹசன் சுரூர் இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உளவுத் தலைவரின் அபாயக் கருத்து: டைம்ஸ் ஊடகத்தின் இதேபோல மற்றொரு நிகழ்வும் அதிர்ச்சி அளிக்கக்கூடியது. டைம்ஸ் லிட் ஃபெஸ்டிவலில் பேசிய பாரதத்தின் முன்னாள் ‘ரா’ உளவுப் பிரிவுத் தலைவரான ஏ.எஸ் துலாத், “மோடிஜி பாகிஸ்தானுக்கு ஜாமீன் கொடுக்கலாம். ஒருவேளை இந்த ஆண்டு முடிவதற்குள் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுமா?” எனத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த கருத்துக்காக துலாத்தை பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஹசன் சுரூர் பாராட்டியுள்ளார். ஏ.எஸ் துலத், பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் காங்கிரஸ் நடத்திய ‘பாரத் ஜோடோ பிரச்சார யாத்திரையில் ராகுல் காந்தியுடன் அவர் காணப்பட்டார். இவர் உலகின் அதிபயங்கரமான பயங்கரவாதிகளிடம் கூட மென்மையான அணுகுமுறையைஒ மேற்கொள்வதற்க்கு பெயர் பெற்றவர். 2019ல் பாகிஸ்தானில் பாலகோட் வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு, பிரதமர் மோடி, பாகிஸ்தான் நிலைமையை பான்படுத்திக்கொள்வதாக குற்றம் சாட்டியிருந்தார்.

ஜாவேத் அக்தர் கருத்து: பாகிஸ்தானின் லாகூரில் சமீபத்தில் ஃபைஸ் இலக்கிய விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் பங்கேற்றார். அப்போது அங்கிருந்த பார்வையாளர்களுடன் கலந்துரையாடிய அக்தர், பாகிஸ்தானின் கோர முகம் குறித்து ஒரு கருத்தைக் கூறினார். பாரதம் பாகிஸ்தான் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல்குறித்து பேசிய அவர், “பாகிஸ்தான் மீது பாரத மக்களுக்கு கோபம் ஏற்பட காரணம் உள்ளது. பாகிஸ்தான் பாடகர் நுஸ்ரத் உள்ளிட்டோரின் இசைக் கச்சேரிகளை நாங்கள் பாரதத்தில் நடத்துகிறோம். ஆனால், பாரதத்தின் லதா மங்கேஷ்கரின் கச்சேரிகளை பாகிஸ்தான் ஒருபோதும் நடத்தியதில்லை. 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல் பற்றி அனைவருக்கும் தெரியும். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் நார்வேயிலிருந்தோ, எகிப்திலிருந்தோ வரவில்லை. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் இன்னமும் பாகிஸ்தானில் தான் சுதந்திரமாக உலவிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் நீதியின் முன்நிறுத்தப்படவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள கோபம் பாரத மக்களின் இதயத்திலிருந்து நீங்க வேண்டுமானால், பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நீங்கள் வலியுறுத்த வேண்டும்” என கூறினார். ஜாவேத் அக்தர் என்றும் பாரதத்துக்கும் அதன் பண்பாட்டு கலாச்சாரத்துக்கும் ஆதரவானவராக இருந்தது இல்லை, பல இடங்களில், பல சமயங்களில் அவர் தனது மத நிலைப்பாட்டையும் பிரிவினைவாத கருத்துகளையும் வெளிப்படுத்தி வந்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் பொதுமக்களால் முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. இந்த சூழலில் அவர் பாரதத்துக்காக பரிந்து பேசியதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

அமன் கி ஆஷா கும்பல்: 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கை விமர்சித்த ஜாவேத் அக்தர், எல்லையின் இருபுறமும் சகிப்பின்மை நிலவுவதாக கூறியிருந்தார். இதையடுத்து இந்த ‘அமன் கி ஆஷா’ கும்பல் அதன் தூக்கத்திலிருந்து மெண்டும் விழித்துக்கொண்டது. சாமானிய பாரதக் குடிமக்களுக்கு அமைதி என்ற மாயையை விற்றுக்கொண்டிருக்கும் இந்த கும்பல், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முயன்றது. இத்தனைக்கும் பாகிஸ்தான் பாரதத்திடம் எந்த உதவியும் கேட்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு வழக்கமான கட்டுரையாளராக இருக்கும் பெடோஃபில் குற்றச்சாட்டுக்கு ஆளான ஹசன் சுரூர், பாகிஸ்தானுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் பொறுப்பை பாரதம் மீது சுமத்தினார். திரைப்பட தயாரிப்பாளரும் நடிகையுமான பூஜா பட், இருவழி முயற்சியின் மூலம் மட்டுமே உறவுகளை சரிசெய்ய முடியும் என்று பரிந்துரைத்தார். “உண்மை உயிருடன் இருக்க, இரண்டு வகையான மக்கள் இருக்க வேண்டும். ஒருவர் உண்மையைப் பேசவும், மற்றவர் அதைக் கேட்கவும் தயாராக இருக்க வேண்டும். மற்றொன்று இல்லாமல் ஒன்று சாத்தியமில்லை” என்று கூறிய அவர், கலப்படமற்ற உண்மையை ஒப்புக் கொள்ளும் விதிவிலக்கான திறனுக்காக பாகிஸ்தானியர்களை பாராட்டினார்! இந்த கூட்டத்தை வழிநடத்தியவர் வேறு யாருமல்ல, பத்திரிகையாளர் பர்கா தத் தான். அவரது செய்தி போர்ட்டல் ‘மோஜோ ஸ்டோரி’யில் பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தரிடம் பாகிஸ்தானுடன் நட்பு உறவுகளை உருவாக்க பாரதத்துக்கு மீண்டும் ‘அன்பு மற்றும் சகோதரத்துவம்’ என்ற செய்தியை ஆதரிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தது.

கற்பனை உலகில் ஏன் வாழ வேண்டும்? ‘அமன் கி ஆஷா’ படைப்பிரிவின் இக்குழு பாரதத்தை பாகிஸ்தானின் மீட்புக்கு வர வற்புறுத்தியது புதிய நிகழ்வு அல்ல. அவர்கள் இந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டனர் அவ்வளவு தான். உண்மையில், ஃபைஸ் விழாவில் ஜாவேத் அக்தர் உரையாற்றுவதற்கு முன்பே, இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் ஆகியோரை பாகிஸ்தனுக்கு உதவுமாறு பலர் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாரதத்துடன் பாகிஸ்தான் என்றும் சமாதானத்தை விரும்பியது இல்லை. அதற்கு ஆதரவு கரத்தை நாம் நீட்ட முயன்ற போதெல்லாம் அது நம்மை முதுகில் குத்தியது. 1999ம் ஆண்டு கார்கில் போர், 2008ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதல், உரி மற்றும் பதான்கோட் தாக்குதல்கள் மற்றும் புல்வாமா தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் போன்றவை பாகிஸ்தானின் மோசமான செயல்திட்டத்திற்கு ஒரு சாட்சி. இருந்த போதிலும், திரைப்படங்கள், பாடகர்கள், இசைக்கலைஞர்கள் அல்லது கிரிக்கெட் என எதுவாக இருந்தாலும் பாகிஸ்தானுடன் தொடர்ந்து பரிமாறிக்கொள்ள விரும்பும் இந்த தாராளவாதிகளின் குரல் பாரதத்தில் உள்ளவர்களிடம் இருந்து மட்டுமே வருகிறது. ஷோயப் அக்தர் போன்ற பல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், கஸ்வா இ ஹிந்த் மர்றும் பாரதத்தை முஸ்லிம்கள் கைப்பற்றுவது பற்றி கனவு காண்பதையும், பாரதத்தவர்கள் மற்றும் ஹிந்துக்கள் மீது விஷத்தையும் வெறுப்பையும் கக்குவதையும் நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். அவர்களின் கிரிக்கெட் வீரர்களுக்கும் கலைஞர்களுக்கும் கூட பாரத விரோத நிலைப்பாட்டில் இவ்வளவு தெளிவு இருந்தால், ஒரு கன்னத்தில் அறைந்தால் மற்றொரு கன்னத்தைக் காட்ட வேண்டும் என்ற கற்பனை உலகில் பாரதம் ஏன் வாழ வேண்டும்? கடந்த 76 ஆண்டுகளில் பாடம் கற்காததால், பாகிஸ்தானுடன் அமைதி சாத்தியமில்லை என்ற உண்மையை ‘அமன் கி ஆஷா’ முகப்பில் மறைக்க முடியாது. பாகிஸ்தானில் இருந்து பாரதத்துக்கு பயங்கரவாதம் ஏற்றுமதி செய்வது நிறுத்தப்படும் வரை பாரதம் பாகிஸ்தானுடன் விளையாட்டு, கலாச்சாரம் என எந்த பரிமாற்றத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்பது தான் பாரத மக்களின் கருத்தாக உள்ளது.