பழைய வங்கிக் காசோலைகள்

பொதுத்துறை வங்கிகளான தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவை, பேங்க் ஆப் பரோடாவுடனும், கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை, யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடனும் இணைக்கப்பட்டன.ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் வங்கி ஆகியவை, பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியுடனும், அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடனும் இணைக்கப்பட்டன. பழைய வங்கிகளின் காசோலைகள் இதுவரை ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்தன. இனி இணைக்கப்பட்ட பழைய வங்கிகளின் காசோலைகள், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல்  செல்லாது, மேற்குறிப்பிட்ட வங்கிகளின் காசோலையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், புதிய வங்கியின் காசோலை புத்தகங்களை கேட்டுப்பெற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட அந்த வங்கிகளின் காசோலைகளை யாரும் பெறக்கூடாது, ஏற்கனவே பெற்றிருந்தால், அதை மாற்றி பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.