உலகம் முழுவதும் ஒமைக்ரான் வகை கொரோனா வேகமாக பரவி வரும் இந்த வேளையில், பிரான்ஸ் நாட்டில் உருமாறிய புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐ.எச்.யு பி.1.640.2 என வகைப்படுத்தப்பட்டுள்ள இக்கொரோனா மத்திய ஆப்ரிக்க நாடான கேமிரோனில் இருந்து வந்த பயணியிடம் முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என 12 பேருக்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒமைக்ரானை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. இந்த புதிய வகை கொரோனா பிற நாடுகளில் இன்னும் கண்டறியப்படவில்லை. உலக சுகாதார அமைப்பும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை.