சைப்ரஸ் நாட்டின் ஒரு பல்கலைக்கழகத்தின் உயிரியல் அறிவியல் பேராசிரியரும், வைராலஜி ஆய்வகத் தலைவருமான லியோண்டியோஸ் கோஸ்ட்ரிகிஸ், கடந்த ஜனவரி 7 அன்று, தனது குழுவினர் 25 கொரோனா நோயாளிகளிடம் டெல்டாக்ரான் என்ற கொரோனா மாறுபாட்டை கண்டுபிடித்ததாக தெரிவித்தார். இந்த மாறுபாடு டெல்டா, ஓமிக்ரான் வகைகளின் கலவையாகத் தோன்றியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத நோயாளிகளை விட, கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களிடையே டெல்டாக்ரான் தொற்று அதிகமாக பரவுகிறது என்று கூறியுள்ளார். ஸ்கிரிப்ஸ் ரிசர்ச் ட்ரான்ஸ்லேஷனல் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியலாளர் எரிக் டோபோல் ‘கொரோனாவின் பிற புதிய மாறுபாடுகள் எதிர்காலத்தில் தோன்றவே செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், டெல்டாக்ரான் மாறுபாடு கவலைக்குரிய ஒன்று’ என்று கூறியுள்ளார். எனினும், சைப்ரஸின் சுகாதார அமைச்சர் மைக்கேல் ஹட்ஜிபந்தேலா ‘இந்த புதிய மாறுபாடு கவலைக்குரியது அல்ல, மேலும் விவரங்கள் இந்த வார இறுதியில் செய்தியாளர் சந்திப்பில் வழங்கப்படும்’ என்றும் தெரிவித்தார்.